1 00:00:14,389 --> 00:00:16,432 நீங்கள் யாரும் சம்மர் கோபமாக இருக்கும்போது அவளைப் பார்த்ததில்லை. 2 00:00:16,433 --> 00:00:19,060 அவள் பயங்கரமாக இருப்பாள். அவள் என்னைக் கொல்லக்கூடும். 3 00:00:19,061 --> 00:00:20,061 அவள் முயன்று பார்க்கட்டும். 4 00:00:20,062 --> 00:00:22,897 அவளை உதைத்து வேறு பிரபஞ்சத்திற்குள் தள்ளிவிடுவேன். 5 00:00:22,898 --> 00:00:25,107 கடவுளே, கேபி. அது அவளுடைய உற்ற தோழி. 6 00:00:25,108 --> 00:00:28,152 ஆம், தெரியும். ஆனால் பிரச்சினை பெரிதானால், நான் என்ன செய்வேன் என ஆலிஸுக்குத் தெரிய வேண்டும். 7 00:00:28,153 --> 00:00:29,278 உங்களை நேசிக்கிறேன். 8 00:00:29,279 --> 00:00:32,155 மேலும், நாங்கள் அனைவரும் ஹை ஸ்கூலில் எங்கள் உற்ற நண்பரின் ஆளுடன் உடலுறவு கொண்டுள்ளோம். 9 00:00:32,156 --> 00:00:34,534 எனக்கு, என் தோழி ஷானாவின் காதலன், ஜஸ்டின். 10 00:00:34,535 --> 00:00:37,620 இறுதியில், அவன் உச்சம் அடையும்போது அழும் விஷயத்தால் நாங்கள் ஒன்றானோம். 11 00:00:37,621 --> 00:00:38,746 அதில் என்ன பிரச்சினை? 12 00:00:38,747 --> 00:00:39,997 சரி. 13 00:00:39,998 --> 00:00:41,749 இருந்தாலும், நீயும் சம்மரும் ஒருவரையொருவர் நேசிக்கிறீர்கள், 14 00:00:41,750 --> 00:00:42,667 - சரியா? - ஆம். 15 00:00:42,668 --> 00:00:44,710 இது சரியாகிவிடும். நீ கொஞ்சம் அமைதியாக இரு. 16 00:00:44,711 --> 00:00:46,170 நீங்கள் கூறுவது சரிதான். 17 00:00:46,171 --> 00:00:49,423 - நீங்கள் வந்ததில் மகிழ்ச்சி. உங்களை நேசிக்கிறேன். - நானும்தான். 18 00:00:49,424 --> 00:00:51,050 நானும் உன்னிடம் இதையேதான் கூறினேன், ஆலிஸ். 19 00:00:51,051 --> 00:00:53,261 நான் உன்னைப் புரிந்துகொள்ளாத முட்டாள் என்று கூறினாய். 20 00:00:53,262 --> 00:00:54,888 கேபி கூறும்போது அது புத்திசாலித்தனமாகத் தெரிகிறது. 21 00:00:55,764 --> 00:00:56,765 எனக்குப் புரிகிறது. 22 00:00:57,432 --> 00:01:00,142 - ஹேய்! இவள் வந்துவிட்டாள்! - யேய்! 23 00:01:00,143 --> 00:01:03,437 யேய்! 24 00:01:03,438 --> 00:01:05,399 - நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். - ஆம். நானும்தான். 25 00:01:05,983 --> 00:01:08,192 நாங்கள் வந்துவிட்டோம்! 26 00:01:08,193 --> 00:01:09,820 ஆம், நாங்கள் ஏற்கனவே கத்திவிட்டோம். 27 00:01:10,737 --> 00:01:12,864 உன் காஃபி தேவையில்லை. நான் ஷாம்பெய்ன் எடுத்து வருகிறேன். 28 00:01:12,865 --> 00:01:14,532 ஓ, அருமை. ஷாம்பெய்ன். 29 00:01:14,533 --> 00:01:16,493 நான் மறந்துவிட்டேன், நான் இதை ரசித்துள்ளேனா? 30 00:01:20,831 --> 00:01:23,040 சம்மர் என் நண்பர்களுடன் உடலுறவு கொள்வதால் 31 00:01:23,041 --> 00:01:26,335 என்னுடன் பேச முடியாது என்கிறாள். 32 00:01:26,336 --> 00:01:30,549 ஆ, கண்ணே. அவள் டேனியலுடன் உடலுறவு கொள்ள மாட்டாள். அவனது கைகள் மிகச் சிறியவை. 33 00:01:31,049 --> 00:01:32,175 - அம்மா... - பார், 34 00:01:32,176 --> 00:01:34,552 நீ உன்னையே நினைத்து பரிதாபப்படுவதை முதலில் நிறுத்த வேண்டும். 35 00:01:34,553 --> 00:01:35,678 நான் என்ன முடிவெடுத்துள்ளேன் தெரியுமா? 36 00:01:35,679 --> 00:01:38,598 நீ நாளை பள்ளிக்குப் போகிறாய். அவ்வளவுதான். 37 00:01:38,599 --> 00:01:41,642 என் வாழ்க்கை முழுக்க நீங்கள் என்னை மிகவும் கட்டுப்படுத்தினீர்கள். 38 00:01:41,643 --> 00:01:45,981 இப்போது நீங்கள் தேவைப்படும்போது, உங்களால் எனக்காக இருக்க முடியாதா? 39 00:01:47,232 --> 00:01:48,233 நீங்கள் இரு... 40 00:01:49,359 --> 00:01:50,360 தைரியம் இருந்தால் சொல். 41 00:01:51,612 --> 00:01:53,029 ஹேய்! 42 00:01:53,030 --> 00:01:54,739 அவன் என்னை கிங் காங் பேய் என்றான். 43 00:01:54,740 --> 00:01:56,365 வாவ். அவன் இன்னும் உயிருடன் இருக்கிறானா? 44 00:01:56,366 --> 00:01:58,701 ஆம், அவனிடம் கவனமாக இரு அல்லது 45 00:01:58,702 --> 00:02:01,537 அவனைக் கொன்றுவிட்டு அவனைப் போல இன்னொரு குழந்தையைப் பெறுவேன் என்றேன். 46 00:02:01,538 --> 00:02:02,622 என்னால் இன்னும் குழந்தையைப் பெற முடியும். 47 00:02:02,623 --> 00:02:03,706 நான் அனைவரிடமும் கூறுகிறேன். 48 00:02:03,707 --> 00:02:08,585 ஒன்று சொல்லவா, கொஞ்சம் சரக்கு குடித்தால், அது நடந்ததையே மறந்துவிடுவேன். சீயர்ஸ். 49 00:02:08,586 --> 00:02:11,339 - சீயர்ஸ், கானர். - சீயர்ஸ். 50 00:02:11,340 --> 00:02:12,423 மன்னிக்கவும். 51 00:02:12,424 --> 00:02:13,509 ஹலோ? 52 00:02:14,593 --> 00:02:15,885 - அது நல்ல சரக்கு. - அருமை. 53 00:02:15,886 --> 00:02:17,179 - ஆம், காலையில் ஷாம்பெய்ன். - என்ன? 54 00:02:18,013 --> 00:02:19,097 - ஹேய். - ஹேய். 55 00:02:19,598 --> 00:02:20,723 அவன் எப்படி இருக்கிறான்? 56 00:02:20,724 --> 00:02:22,683 அவனை மோசமாக அடித்துள்ளனர். 57 00:02:22,684 --> 00:02:25,353 அவனது கால் உடைந்துள்ளது. ஏற்கனவே அவனுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது, 58 00:02:25,354 --> 00:02:27,772 நீங்கள் உள்ளே போவதற்கு முன் உங்களை எச்சரிக்கிறேன்... 59 00:02:27,773 --> 00:02:28,898 என்ன? 60 00:02:28,899 --> 00:02:30,484 அவன் மிகவும் போதையில் இருக்கிறான். 61 00:02:33,487 --> 00:02:34,779 யார் வந்திருக்கிறார் பாருங்கள். 62 00:02:34,780 --> 00:02:39,076 எனக்குப் பிடித்த பேண்டு, கேபி மற்றும் வெள்ளை ரட்சகர்கள். 63 00:02:42,287 --> 00:02:43,120 அது வேடிக்கையாக உள்ளது. 64 00:02:43,121 --> 00:02:44,873 சரி, ஏதாவது பாடுங்கள். 65 00:03:17,573 --> 00:03:18,739 நான் ஒரு பேய். 66 00:03:18,740 --> 00:03:20,491 இவனுக்கு எவ்வளவு மருந்துகள் கொடுத்துள்ளனர்? 67 00:03:20,492 --> 00:03:21,702 நிறைய போல. 68 00:03:22,870 --> 00:03:24,871 அது நான்தான். நான்தான் போர்வையில் ஒளிந்திருந்தேன். 69 00:03:24,872 --> 00:03:27,082 - ஆம், பார்த்தோம். - அது அருமையாக இருந்தது. 70 00:03:27,875 --> 00:03:29,375 {\an8}அவர்கள் என் ஆணுறுப்பிற்குள் குழாயை வைத்தனர். 71 00:03:29,376 --> 00:03:30,501 {\an8}- ம்ம் ஹ்ம்ம். - அதிர்ஷ்டசாலி. 72 00:03:30,502 --> 00:03:32,920 {\an8}ஆனால் அதை வைத்த ஆள் மிகவும் கனிவாக இருந்தான். 73 00:03:32,921 --> 00:03:36,382 {\an8}உங்கள் ஆணுறுப்பில் எப்போதாவது குழாய் தேவையெனில், அவன்தான் சிறந்தவன். 74 00:03:36,383 --> 00:03:38,010 {\an8}நான் குறித்துக்கொள்கிறேன். 75 00:03:38,886 --> 00:03:39,886 {\an8}எப்போது தேவைப்படும் எனத் தெரியாது. 76 00:03:39,887 --> 00:03:41,179 {\an8}அவன் பெயர் லாரன்ஸ். 77 00:03:41,180 --> 00:03:43,389 {\an8}- லாரன்ஸ் ஒரு கற்பனை நபர். - இல்லை. 78 00:03:43,390 --> 00:03:46,642 {\an8}ஹேய், நாங்கள் அனைவரும் உனக்காக வந்துள்ளோம் என்பதைத் தெரிந்துகொள். 79 00:03:46,643 --> 00:03:49,270 {\an8}நீங்களும் பாலும் எப்போதும் எனக்காக இருப்பீர்கள். 80 00:03:49,271 --> 00:03:54,109 {\an8}அது எப்படி முடிந்துள்ளது என்று பாருங்கள். நன்றி, பெரிய தலையா. 81 00:03:55,485 --> 00:03:56,319 {\an8}பெரிய தலையாவா? 82 00:03:56,320 --> 00:03:57,486 {\an8}அந்தப் பெயர் மாறாது. 83 00:03:57,487 --> 00:04:01,991 {\an8}லிஸ்! எனக்கு துரோகம் செய்த, எனக்குப் பிடித்த பிசினஸ் பார்ட்னர். 84 00:04:01,992 --> 00:04:06,455 {\an8}பிளைண்ட் சைட் போல எனக்கு உதவி, என்னைக் கழட்டிவிட்டுவிட்டீர்கள். 85 00:04:08,749 --> 00:04:09,749 {\an8}அடக் கடவுளே. 86 00:04:09,750 --> 00:04:11,918 {\an8}இங்கே என்ன செய்கிறீர்கள், ஜிம்மி காதலி? 87 00:04:11,919 --> 00:04:16,422 {\an8}சரி, பார். இப்போது நான் ஜிம்மி காதலி இல்லை என்பதைத் தெரிந்துகொள். 88 00:04:16,423 --> 00:04:18,674 {\an8}ஒருமுறை ஜிம்மி காதலி என்றால் எப்போதும் ஜிம்மி காதலிதான். 89 00:04:18,675 --> 00:04:20,176 {\an8}அது தவறு இல்லை. 90 00:04:20,177 --> 00:04:22,052 {\an8}- நான் அப்படித்தான் கேள்விப்பட்டேன். - கமான். 91 00:04:22,053 --> 00:04:23,137 {\an8}ஓ, இல்லை. 92 00:04:23,138 --> 00:04:25,848 {\an8}அம்மா, அவள் என்னை முத்தமிட முயன்றாள். 93 00:04:25,849 --> 00:04:26,766 {\an8}அடக் கடவுளே. 94 00:04:26,767 --> 00:04:28,100 {\an8}ஆலிஸ்? 95 00:04:28,101 --> 00:04:30,811 {\an8}அவள் இப்போது விநோதமான பக்கத்து வீட்டுப் பையனை முத்தமிடுகிறாள். 96 00:04:30,812 --> 00:04:33,357 {\an8}- ஹேய்! - ஆம். அவன் விநோதமானவன்தான். 97 00:04:34,358 --> 00:04:35,359 {\an8}ஹேய். 98 00:04:36,276 --> 00:04:38,361 {\an8}மருத்துவமனையில் இருக்கும் என் நண்பர்களைப் பார்க்க வரும்போது என் மனதில் 99 00:04:38,362 --> 00:04:40,279 {\an8}- இந்த சத்தம்தான் ஒலிக்கும்... கடவுளே. - விநோதம் என்றவுடன் வந்துவிட்டான். 100 00:04:40,280 --> 00:04:43,324 {\an8}பிரையன், கவனமாக இரு. இவன் போதையிலும், அச்சுறுத்துபவனாகவும் உள்ளான். 101 00:04:43,325 --> 00:04:46,078 {\an8}அடக் கடவுளே! இதோ மிகச் சிறந்த வக்கீல். 102 00:04:46,662 --> 00:04:47,787 {\an8}உங்களை மிகவும் நேசிக்கிறேன். 103 00:04:47,788 --> 00:04:49,121 {\an8}உன்னை நேசிக்கிறேன். 104 00:04:49,122 --> 00:04:51,249 {\an8}- இது மிகவும் கனிவானது. - என்ன இது, ஷான்? 105 00:04:51,250 --> 00:04:54,544 {\an8}இருந்தாலும் நீங்கள் குழந்தையைத் தத்தெடுக்கக் கூடாது. நீங்கள் மோசமான அப்பாவாக இருப்பீர்கள். 106 00:04:54,545 --> 00:04:55,629 {\an8}ஓ, அடச்ச. 107 00:04:56,421 --> 00:04:57,755 {\an8}ஹேய். என்னைப் பற்றிச் சொல். 108 00:04:57,756 --> 00:04:59,091 {\an8}ஒழிந்து போங்கள், பாம். 109 00:05:00,717 --> 00:05:01,926 {\an8}அருமை. 110 00:05:01,927 --> 00:05:04,720 {\an8}என் அப்பாவைப் பார்க்க வேண்டும். அவர் இருக்கிறாரா? 111 00:05:04,721 --> 00:05:07,766 {\an8}கண்ணே, அப்பா இங்குதான் இருந்தார், ஆனால் அவர் போக வேண்டியதாயிற்று. 112 00:05:08,892 --> 00:05:11,435 {\an8}நீங்கள் அனைவரும் போக வேண்டும். இவன் ஓய்வெடுக்க வேண்டும். 113 00:05:11,436 --> 00:05:12,478 {\an8}- ஆம். - சில மணிநேரம் கழித்து 114 00:05:12,479 --> 00:05:14,188 {\an8}உன்னை வந்து பார்க்கிறோம், சரியா? 115 00:05:14,189 --> 00:05:15,732 {\an8}சரி, பெரிய தலையா. 116 00:05:16,316 --> 00:05:17,609 {\an8}இது என் உடலுக்கேற்ற அளவில்தான் உள்ளது. 117 00:05:20,237 --> 00:05:21,947 {\an8}அது மிகப் பெரியது. 118 00:05:24,366 --> 00:05:25,534 {\an8}உங்களிடம் கொஞ்சம் பேசலாமா? 119 00:05:26,535 --> 00:05:28,870 {\an8}ஷான் இன்னொரு சண்டையில் ஈடுபட்டான் எனத் தெரிந்தவுடன், 120 00:05:28,871 --> 00:05:30,205 {\an8}டிம் கோபப்பட்டு, கிளம்பிவிட்டார். 121 00:05:30,789 --> 00:05:32,707 ஷானின் அப்பா இல்லாமல் அவன் கண் விழிப்பதை நான் விரும்பவில்லை. 122 00:05:32,708 --> 00:05:36,127 நீங்கள் இருவரும் அவரிடம் பேசலாம். தெரபிஸ்டுகளின் வேலை அதுதானே? 123 00:05:36,128 --> 00:05:37,253 வழக்கமாக அது இல்லை. 124 00:05:37,254 --> 00:05:40,882 அதாவது, ஜிம்மி செய்வது என்ற புதுமையான வழி ஒன்று உள்ளது. 125 00:05:40,883 --> 00:05:44,302 இல்லை. நாங்கள் ஷானுக்காகவும் உங்களுக்கு உதவவும்தான் இங்கே வந்தோம். 126 00:05:44,303 --> 00:05:49,056 ஆனால் நீங்கள் கேட்பது நாங்கள் செய்வதில்லை. 127 00:05:49,057 --> 00:05:51,518 எனக்குப் புரிகிறது. வந்ததற்கு நன்றி. 128 00:05:52,102 --> 00:05:53,478 எங்களுக்கு தெரிவித்துக்கொண்டே இருங்கள், சரியா? 129 00:05:54,479 --> 00:05:56,814 இங்கே குழந்தைகளைப் பார்ப்பதற்கான ஜன்னல்களைத் தேடினேன். 130 00:05:56,815 --> 00:05:57,815 அது இல்லவே இல்லை. 131 00:05:57,816 --> 00:06:00,526 குழந்தைகள் இருக்கும் அறை ஒன்று உள்ளது, அதில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. 132 00:06:00,527 --> 00:06:02,570 பெற்றோர்களைத் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார்கள். அது அபத்தம். 133 00:06:02,571 --> 00:06:03,487 என்னை மன்னித்துவிடு. லூயிஸ் 134 00:06:03,488 --> 00:06:04,698 அவர்கள் ஏன்... 135 00:06:07,576 --> 00:06:09,785 ஹேய். இப்போதும் உன்னை வீட்டுக்குக் கூட்டிச் செல்கிறேன், 136 00:06:09,786 --> 00:06:11,412 ஆனால் முதலில் சலவைக் கடைக்குச் செல்ல வேண்டும். 137 00:06:11,413 --> 00:06:13,247 வேண்டுமெனில் உன்னை நான் கொண்டு விடுகிறேன். 138 00:06:13,248 --> 00:06:15,333 ஓ, ஆம், ஆனால் அங்கே கம்பால்கள் கொடுப்பார்கள். 139 00:06:15,334 --> 00:06:17,002 - சரி. - ஆசையாகத்தான் உள்ளது. 140 00:06:17,920 --> 00:06:18,795 நான் பிரையனுடன் செல்கிறேன். 141 00:06:19,630 --> 00:06:20,839 எனக்கு அதிக கம்பால்கள். 142 00:06:21,798 --> 00:06:23,592 - இருந்தாலும், நன்றி. - சரி. பார்க்கலாம். 143 00:06:26,470 --> 00:06:27,387 என் காஃபி எங்கே? 144 00:06:30,390 --> 00:06:32,017 நான் காஃபி வாங்கப் போவதாகக் கூறினேன் எனத் தெரியும். 145 00:06:32,935 --> 00:06:36,521 நான் ஷானின் அப்பாவுக்கு கால் செய்தேன், அவர் என் எண்ணை பிளாக் செய்துள்ளார். 146 00:06:36,522 --> 00:06:38,397 அவர் எங்கே இருப்பார் என அவனது அம்மாவிடம் கேட்டேன், 147 00:06:38,398 --> 00:06:40,566 டிம் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கும்போது பல்போவா ஏரியில் 148 00:06:40,567 --> 00:06:43,570 மீன்பிடிக்கச் செல்வார் என்றார். 149 00:06:44,446 --> 00:06:47,740 என்ன சொல்கிறீர்கள்? அவரைக் கண்டுபிடித்து அவரை இங்கே வரும்படி சமாதானம் செய்வோம். 150 00:06:47,741 --> 00:06:51,202 நான் போய் பேஷன்டின் அப்பாவிடம் ஜிம்மி செய்யப் போவதில்லை. 151 00:06:51,203 --> 00:06:53,162 நீங்கள் ஜிம்மி என்பதை வினையாகப் பயன்படுத்தினீர்கள். 152 00:06:53,163 --> 00:06:55,456 இழிவாகத்தான் பயன்படுத்தினீர்கள், ஆனாலும் பயன்படுத்தினீர்கள். 153 00:06:55,457 --> 00:06:57,250 - அது கணக்கில் வராது. - ஆம், அது வரும். 154 00:06:57,251 --> 00:06:58,584 - இல்லை, வராது. - ஆம், வரும். 155 00:06:58,585 --> 00:06:59,919 - இல்லை, வராது. - இல்லை, வராது. 156 00:06:59,920 --> 00:07:01,546 இந்த பக்ஸ் பன்னி தந்திரமெல்லாம் வேண்டாம். 157 00:07:01,547 --> 00:07:03,005 நீங்கள் ஜிம்மி செய்ய விரும்புகிறீர்கள். 158 00:07:03,006 --> 00:07:04,465 உங்களால் முடியும் என நீங்கள் நினைக்கவில்லை, 159 00:07:04,466 --> 00:07:06,510 ஏனெனில் அது நீங்களும் நானும்... 160 00:07:07,177 --> 00:07:09,930 ஒரே மாதிரியான குணங்களைக் கொண்டிருப்பதை ஒத்துக்கொள்வதாகும். 161 00:07:10,722 --> 00:07:13,975 நீ நிறைய கோபப்படுத்தும் விஷயங்களைக் கூறியுள்ளாய். 162 00:07:13,976 --> 00:07:16,143 எங்கே தொடங்குவது என்று கூடத் தெரியவில்லை. 163 00:07:16,144 --> 00:07:18,145 சரி, ஒன்று சொல்லவா? நானே செல்கிறேன். 164 00:07:18,146 --> 00:07:20,315 நீங்கள் காரிலிருந்து இறங்கி லிஃப்டில் செல்லலாம். 165 00:07:21,233 --> 00:07:23,735 - அதை எப்படிச் செய்வது என எனக்குத் தெரியாது. - நீங்கள் இங்கே அப்படித்தான் வந்தீர்கள். 166 00:07:24,319 --> 00:07:25,444 அடச்சே. 167 00:07:25,445 --> 00:07:29,532 சரி, நான் வருகிறேன். ஆனால் எதுவும் மோசமாக நடக்கக் கூடாது என்பதற்காகத்தான். 168 00:07:29,533 --> 00:07:31,325 - ஒன்று சொல்லவா? அது போதாது. - இல்லை. 169 00:07:31,326 --> 00:07:32,493 பால். 170 00:07:32,494 --> 00:07:36,706 பால், நீங்கள் இதைச் செய்ய விரும்புவதை ஒப்புக்கொள்ள வேண்டும், 171 00:07:36,707 --> 00:07:38,333 அல்லது காரிலிருந்து இறங்கலாம். 172 00:07:43,172 --> 00:07:46,841 - சரி, இவனை ஜிம்மி செய்வோம்! - அருமை! நல்லவேளை ஒப்புக்கொண்டீர்கள். 173 00:07:46,842 --> 00:07:49,261 நான் அதிகமாகப் பேசிவிட்டேனோ என பயந்துவிட்டேன். 174 00:07:52,806 --> 00:07:55,516 கோர்ட்னியால் என் பதின்ம பருவ ஆண்டுகள் பாழாகியுள்ளன, இப்போது 175 00:07:55,517 --> 00:07:58,436 அம்மா விஷயத்தில் அவள் எனக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறாளா? அது முட்டாள்தனம், லிஸ். 176 00:07:58,437 --> 00:08:00,355 நான் என்ன சொல்ல வேண்டும்? 177 00:08:01,023 --> 00:08:03,482 தெரியாது. கோர்ட்னி சரியாகிவிட்டாலும், 178 00:08:03,483 --> 00:08:06,569 அவள் அங்கே இருந்து அம்மாவைப் பார்த்துக்கொள்ள நான் அழுத்தம் கொடுப்பது சரி என்றா? 179 00:08:06,570 --> 00:08:08,529 நீ சரியானதைத்தான் செய்கிறாய். 180 00:08:08,530 --> 00:08:12,200 இன்று என் அம்மாவுக்கு கண்புரை அறுவை சிகிச்சை நடக்கிறது, அதற்கு நான் போகாததும் சரி என்று. 181 00:08:12,201 --> 00:08:14,952 நான் அதையும் சரி என்று கூற வேண்டுமா? 182 00:08:14,953 --> 00:08:20,541 ஆம். அது வெளி நோயாளிகளுக்கானது, தெரியுமா? என் சகோதரியும் அங்கே இருப்பாள். 183 00:08:20,542 --> 00:08:22,585 நீ அசத்துகிறாய். 184 00:08:22,586 --> 00:08:25,671 அறுவை சிகிச்சையின் போது உன் அம்மா ஒரு கண்ணை இழந்தாலும், 185 00:08:25,672 --> 00:08:27,465 நீ அங்கே இல்லையென்றால், அவரால் உன்னைப் பார்க்க முடியாது. 186 00:08:27,466 --> 00:08:29,800 அது மிகவும் இனிமையான விஷயம். இங்கே வா. 187 00:08:29,801 --> 00:08:31,052 - ஆம், உன்னை நேசிக்கிறேன். - உன்னை நேசிக்கிறேன். 188 00:08:31,053 --> 00:08:34,305 உன் திறமையைப் பார், பெண்ணே. நீ அந்த நாய்களை அழகாகக் காட்டியிருக்கிறாய். 189 00:08:34,306 --> 00:08:37,682 இதைப் பற்றித் தெரியவில்லை. இவன் கொஞ்சம் பார்க்க விநோதமாக இருக்கிறான். 190 00:08:37,683 --> 00:08:38,683 மேலும், இவன் ஒரு ஊதாரி. 191 00:08:38,684 --> 00:08:41,355 இவன் எல்லோருடனும் உடலுறவு கொள்வான், பிறகு கண்டுகொள்ள மாட்டான். அதுதான் பிரச்சினை. 192 00:08:42,563 --> 00:08:43,564 என்ன செய்கிறீர்கள்? 193 00:08:43,565 --> 00:08:44,815 நாங்கள் மறுசீரமைக்கிறோம். 194 00:08:44,816 --> 00:08:47,318 நான் பெரிய நன்கொடையாளர், எனவே நாங்களே உள்ளே வந்துவிட்டோம். 195 00:08:47,319 --> 00:08:49,070 நீங்கள் அப்படிச் செய்யக் கூடாது. 196 00:08:49,071 --> 00:08:52,740 என் படங்கள் இணையதளத்திற்கு ஏற்றதாக இல்லை என்று கூறியது தெரியும், 197 00:08:52,741 --> 00:08:54,325 ஆனால் எனக்கு ஒரு வெற்றி தேவை. 198 00:08:54,326 --> 00:08:57,662 இப்போது எனக்கு நிறைய தனிப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. 199 00:08:57,663 --> 00:09:00,122 அதில் குழந்தைகளும் உணவு டிரக்குகளும் உண்டு, 200 00:09:00,123 --> 00:09:03,000 என் பக்கத்து வீட்டுக்காரரிடம் கூறாதீர்கள், என்னால் இப்போது குழந்தை பெற முடியாது. 201 00:09:03,001 --> 00:09:04,502 சரி, அது எனக்குத் தேவையில்லை. 202 00:09:04,503 --> 00:09:06,379 நீங்கள் இதைக் கண்டுகொள்ளாமல் 203 00:09:06,380 --> 00:09:10,592 இதைச் செய்யவிடலாம் என நினைத்தேன். 204 00:09:11,093 --> 00:09:11,927 ப்ளீஸ்? 205 00:09:13,887 --> 00:09:14,720 சரி. 206 00:09:14,721 --> 00:09:16,849 - யேய்! - நன்றி. 207 00:09:19,101 --> 00:09:20,977 நான் போனதும் இவற்றை எடுத்துவிடுவீர்கள்தானே? 208 00:09:20,978 --> 00:09:22,771 - ஆம். - அட. 209 00:09:23,605 --> 00:09:25,022 - பரவாயில்லை. எனக்குக் கவலையில்லை. - இல்லை. 210 00:09:25,023 --> 00:09:27,400 - எனக்குக் கவலையில்லை. நானே அவற்றை எடுக்கிறேன். - இல்லை! 211 00:09:27,401 --> 00:09:28,860 - அது முக்கியமில்லை. - அது முக்கியம்தான். 212 00:09:28,861 --> 00:09:31,445 ஒன்று சொல்லவா, நண்பா? இந்த நாய்கள் எதுவும் தத்தெடுக்கப்படாது என நம்புகிறேன். 213 00:09:31,446 --> 00:09:32,698 இவை எல்லாம்... 214 00:09:33,782 --> 00:09:35,992 இல்லை. உண்மையில், அவற்றுக்கு எதுவும் ஆகாது. 215 00:09:35,993 --> 00:09:39,371 அவை வாழட்டும், ஆனால் நீ... நீ கொல்லப்படுவாய் என நம்புகிறேன். 216 00:09:40,122 --> 00:09:41,998 - இல்லை. - நான் அப்படிச் சொல்லவில்லை. 217 00:09:41,999 --> 00:09:45,752 அப்படிச் சொல்லவேயில்லை. மன்னிக்கவும், சரியா? நீ வாழ்வாய். பை. 218 00:09:46,253 --> 00:09:47,087 ஹேய், லிஸ்! 219 00:09:48,505 --> 00:09:50,549 - சரி, நீங்கள் என்னைப் பின்தொடர்கிறீர்கள். - ஆம். 220 00:09:51,300 --> 00:09:53,176 அந்த நீண்ட, அமைதியான பயணத்திற்கு நன்றி. 221 00:09:53,177 --> 00:09:56,137 எப்போதும். நீ இருப்பதே வரம்தான். 222 00:09:56,138 --> 00:09:58,891 சரி, நீங்கள் விநோதமாக உள்ளீர்கள். அது எனக்கு வியர்க்க வைக்கிறது. 223 00:09:59,558 --> 00:10:00,641 நான் உன்னிடம் பேச வேண்டும். 224 00:10:00,642 --> 00:10:03,769 நான் கூற விரும்புவதை 225 00:10:03,770 --> 00:10:09,483 எப்படி கூறுவது எனத் தெரியவில்லை. 226 00:10:09,484 --> 00:10:12,528 எனக்கு எதாவது குடிக்க வேண்டும். உனக்கு வேண்டுமா? மார்ட்டினி செய்யலாமா? 227 00:10:12,529 --> 00:10:15,198 இப்போது காலை 11 மணி, மேலும் எனக்கு 17 வயது, ஆனாலும் சரி. 228 00:10:15,199 --> 00:10:16,992 சரி. சரி. 229 00:10:19,119 --> 00:10:21,412 விஷயத்திற்கு வருகிறேன். சரி, சொல்கிறேன். 230 00:10:21,413 --> 00:10:24,458 உன் அம்மா மீது 231 00:10:25,751 --> 00:10:27,002 காரை ஏற்றிய நபருடன்... 232 00:10:28,879 --> 00:10:29,921 நான் பேசிக்கொண்டிருக்கிறேன். 233 00:10:29,922 --> 00:10:30,922 என்ன? 234 00:10:30,923 --> 00:10:33,759 கேள். இது நன்றாக மாறும். மாறாது, ஆனால் கேள். 235 00:10:34,760 --> 00:10:36,260 அவன் உன் பர்ஸைக் கொடுக்க வந்தான்... 236 00:10:36,261 --> 00:10:37,595 - இங்கே வந்தானா? - ஆம். 237 00:10:37,596 --> 00:10:39,347 எப்போது? வீட்டுக்கா? 238 00:10:39,348 --> 00:10:41,599 - அவனிடம் பேசினீர்களா... - தொடர்ந்து கேள்வி கேட்டால் 239 00:10:41,600 --> 00:10:44,394 நான் மேலும் பதட்டமடைவேன். எனவே என்னைச் சொல்லவிடு. 240 00:10:48,565 --> 00:10:50,441 - சொல்லுங்கள். - அவன் இங்கே வந்தான், 241 00:10:50,442 --> 00:10:52,443 நான், “இந்தக் குடும்பத்தை விட்டு விலகிப் போ. ஓடிவிடு.” என்றேன். 242 00:10:52,444 --> 00:10:53,694 அவன், “மன்னித்துவிடுங்கள்” என்றான். 243 00:10:53,695 --> 00:10:56,155 ஆனால் காயப்பட்டிருப்பது போல, “மன்னித்துவிடுங்கள்” என்றான். 244 00:10:56,156 --> 00:10:59,784 ”நீ நலமா?” என்று கேட்டேன். அவன் ஆம் என்றான், ஆனால் அப்படி இல்லை என எனக்குத் தெரிந்தது. 245 00:10:59,785 --> 00:11:01,661 நான் மிகவும் பச்சாதாபத்துடன் இருக்கிறேன், 246 00:11:01,662 --> 00:11:03,622 ஏனெனில் சார்லியும் நானும் குழந்தையைத் தத்தெடுக்கத் தீர்மானித்துள்ளோம். 247 00:11:04,289 --> 00:11:06,582 அது ஆண்குழந்தை எனில், பீட்டர் பெர்னடெட் என்று பெயரிடப் போகிறோம், 248 00:11:06,583 --> 00:11:08,835 பெண்குழந்தையெனில், கண்டிப்பாக பெர்னடெட் பீட்டர்ஸ். 249 00:11:08,836 --> 00:11:11,629 அவன் வேலை செய்யும் காஃபி கடைக்குச் சென்றேன். 250 00:11:11,630 --> 00:11:14,757 அவனைப் பார்க்க இல்லை, அவன் நலமாக உள்ளானா என்று கேட்க. 251 00:11:14,758 --> 00:11:18,094 அவனது முதலாளி டோனி சொப்ரானோ போன்ற ஆள், ஆனால் அழகானவன். 252 00:11:18,095 --> 00:11:21,472 அவன் நம்மை துவைத்துவிடுவான், அதேநேரம் நன்றாக முத்தமிடுவான் என்பது போன்றவன். 253 00:11:21,473 --> 00:11:22,641 அவனைப் படமெடுத்திருக்கலாம். 254 00:11:23,308 --> 00:11:26,811 நான் அவனிடம் லூயிஸ் பற்றிக் கேட்டேன், 255 00:11:26,812 --> 00:11:31,399 அவன், “அவன் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறான். அவன் 256 00:11:31,400 --> 00:11:34,193 மன அழுத்தத்தில் இருப்பவன்தான், ஆனால் அதற்காக ஒருவனை வேலையைவிட்டு நீக்க முடியாது. 257 00:11:34,194 --> 00:11:35,570 என்னவொரு கலாச்சாரம், இல்லையா?“ என்றான். 258 00:11:35,571 --> 00:11:38,281 உடனே அவன் லூயிஸை அழைத்தான், நாங்கள் பேசத் தொடங்கினோம்... 259 00:11:38,282 --> 00:11:41,909 ஆலிஸ், அவனது வாழ்க்கை இருளானது, 260 00:11:41,910 --> 00:11:45,079 ரெக்யுவெம் ஃபார் எ ட்ரீம் அளவுக்கு இருளானது. 261 00:11:45,080 --> 00:11:47,582 அவர்கள் போதை மருந்து எடுத்துக்கொள்ளும் இடைப்பட்ட பகுதி போல இல்லை, 262 00:11:47,583 --> 00:11:51,795 அந்த போதை மருந்து மகிழ்ச்சியில்லை என்று உணரும் இறுதிப் பகுதி போல. 263 00:11:53,130 --> 00:11:54,173 அவனுக்கு நண்பர்களே இல்லை. 264 00:11:55,632 --> 00:11:58,259 பேச யாரும் இல்லை. அவன் கஷ்டப்படுகிறான். 265 00:11:58,260 --> 00:12:01,345 அதனால் அவனுடன் கொஞ்சம் நடந்தேன், நாங்கள் பேசினோம், 266 00:12:01,346 --> 00:12:06,310 ஏனெனில் நான் உதவ முயற்சி கூட எடுக்கவில்லை எனில், என்னால்... 267 00:12:07,394 --> 00:12:11,190 நிம்மதியாக வாழ முடியாது. அவ்வளவுதான். கதை முடிந்தது. 268 00:12:11,940 --> 00:12:14,610 மேலும், அப்போதிருந்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அவனைப் பார்க்கிறேன். 269 00:12:16,111 --> 00:12:17,613 எப்போதாவது இரவில் அவனுக்கு மெசேஜ் செய்கிறேன். 270 00:12:19,072 --> 00:12:22,117 அவன் என்னை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்கிறான். அவ்வளவுதான். உன் முறை. 271 00:12:24,620 --> 00:12:25,620 நான் அவனிடம் பேச வேண்டும். 272 00:12:25,621 --> 00:12:28,831 சரி, நீ என்ன கூற வேண்டும் என்று கூறினால், நான் அதை அவனுக்கு 273 00:12:28,832 --> 00:12:29,749 மெசேஜ் அனுப்புவது சுலபமாக இருக்கும். 274 00:12:29,750 --> 00:12:31,501 இப்போதே அவனிடம் என்னைக் கூட்டிச் செல்லுங்கள் 275 00:12:31,502 --> 00:12:33,336 இல்லையெனில் நீங்கள் அம்மாவைக் கொன்றவனுடன் உறவாடுகிறீர்கள் 276 00:12:33,337 --> 00:12:34,712 என்று அப்பாவிடம் கூறிவிடுவேன். 277 00:12:34,713 --> 00:12:36,882 - பயணத்திற்கு தண்ணீர் எடுத்துக்கொள்வோமா? - வாருங்கள். 278 00:12:51,313 --> 00:12:55,943 டிம்? வாய்ப்பே இல்லை. நீங்களும் இங்கேதான் மீன்பிடிப்பீர்களா? 279 00:12:56,527 --> 00:12:57,443 எப்படி என்னைக் கண்டுபிடித்தீர்கள்? 280 00:12:57,444 --> 00:12:59,654 என்ன பேசுகிறீர்கள்? இது எங்களுடைய இடம். 281 00:12:59,655 --> 00:13:02,532 {\an8}நீங்கள் கரோலினா ரிக்கைப் பயன்படுத்துகிறீர்களா? 282 00:13:02,533 --> 00:13:04,575 {\an8}அது ஆழத்தில் மீன்பிடிக்க ஏற்றது. 283 00:13:04,576 --> 00:13:06,994 {\an8}உங்கள் மனைவி உங்களிடம் பேசும்படி கேட்டார். 284 00:13:06,995 --> 00:13:08,454 அவர் அதை நம்பினார், பால். 285 00:13:08,455 --> 00:13:11,332 {\an8}அது உண்மையான மீன்பிடிப்பவர்களின் பாஷை. நான் கூகுளில் தேடினேன். 286 00:13:11,333 --> 00:13:15,045 {\an8}இங்கே அருமையாக உள்ளதல்லவா? நான் என் அப்பாவுடன் மீன்பிடித்துள்ளேன். 287 00:13:16,255 --> 00:13:18,923 {\an8}ஜிம்மி இல்லை, இவன் படகுகளை வெறுக்கிறான். 288 00:13:18,924 --> 00:13:22,845 நான் ஹை ஸ்கூலில் இருக்கும்போது, நான் படகில் சென்றபோது, கவிழ்ந்துவிட்டேன். 289 00:13:23,637 --> 00:13:25,513 நான் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டேன். 290 00:13:25,514 --> 00:13:29,226 அது மிகவும் நிலைதடுமாறுவதாக இருந்தது, மிகவும் பயமுறுத்துவதாகவும் இருந்தது. 291 00:13:30,394 --> 00:13:32,187 அது எங்கே நடந்ததென அவரிடம் சொல். 292 00:13:33,564 --> 00:13:35,315 மேண்டலே பேவில் உள்ள லேஸி ஆற்றில். 293 00:13:36,024 --> 00:13:39,151 கேளுங்கள், டிம், நாம் அனைவரும் சோகமாக உணர்கிறோம். 294 00:13:39,152 --> 00:13:41,445 நாம் ஆழத்தில் மீன்பிடிக்கும் கிரான்க்பெயிட் போல இணைந்துள்ளோம்... 295 00:13:41,446 --> 00:13:43,906 உங்கள் புதிய மீன்பிடி வார்த்தைகளைக் கூறுவதை நிறுத்துங்கள். 296 00:13:43,907 --> 00:13:45,658 அது தடையின்றி வந்ததென நினைத்தேன். 297 00:13:45,659 --> 00:13:46,659 இல்லையா? சரி. 298 00:13:46,660 --> 00:13:50,204 விஷயம் என்னவெனில், நீங்கள் இப்போது மிகுதியான உணர்ச்சியில் இருப்பீர்கள்... 299 00:13:50,205 --> 00:13:52,748 - நான் எப்படி உணர்கிறேன் எனத் தெரியுமா? - மன்னிக்கவும், நான்... 300 00:13:52,749 --> 00:13:55,501 பால், அப்படிச் செய்யாதீர்கள். எனக்குப் பிடிக்கவில்லை. 301 00:13:55,502 --> 00:13:56,627 நான் எதுவும் செய்யவில்லை. 302 00:13:56,628 --> 00:13:58,297 நான் கிட்டத்தட்ட இறந்திருப்பேன், பால். 303 00:13:58,881 --> 00:14:00,673 டிம், எங்களுக்கு ஐந்து நிமிடங்கள் கொடுங்கள். 304 00:14:00,674 --> 00:14:02,801 அதை மீண்டும் செய்தால் யோசிக்கிறேன். 305 00:14:06,638 --> 00:14:07,513 பால், நிறுத்துங்கள்! 306 00:14:07,514 --> 00:14:08,973 சரியா? 307 00:14:08,974 --> 00:14:10,309 சரி. 308 00:14:11,935 --> 00:14:15,272 ஆ, அன்பே, நான் வருந்துகிறேன். 309 00:14:15,772 --> 00:14:18,107 அந்தப் படங்கள் அருமையாக இருந்தன. 310 00:14:18,108 --> 00:14:19,317 அவற்றைப் பார்த்தீர்களா இல்லையா? 311 00:14:19,318 --> 00:14:21,986 கண்டிப்பாக. அதில் ஒரு நாய் இருந்தது. 312 00:14:21,987 --> 00:14:23,112 அவை எல்லாமே நாய்கள்தான். 313 00:14:23,113 --> 00:14:24,615 அதனால்தான் அதன் சாராம்சம் எனக்குப் புரிந்தது. 314 00:14:25,282 --> 00:14:26,324 டி-ட்ரெய்ன். 315 00:14:26,325 --> 00:14:27,867 - என்ன? - கானர் எங்கே? 316 00:14:27,868 --> 00:14:29,243 அவன் வெட்டியாக இருந்தால் 317 00:14:29,244 --> 00:14:31,329 என் காரிலிருந்து அந்தப் படங்களையாவது எடுத்து வரலாம். 318 00:14:31,330 --> 00:14:32,623 அவன் பள்ளிக்குச் சென்றுவிட்டான். 319 00:14:33,373 --> 00:14:35,541 என்ன? சென்றுவிட்டானா? 320 00:14:35,542 --> 00:14:36,543 ஆம். 321 00:14:39,338 --> 00:14:41,173 அவன் நமக்கு குட்பை சொல்லாமல் சென்றதை நம்ப முடியவில்லை. 322 00:14:43,467 --> 00:14:44,759 என்ன? 323 00:14:44,760 --> 00:14:47,721 அதாவது, எனக்கு குட்பை கூறினான். 324 00:14:48,305 --> 00:14:50,431 கடவுளே, டி-ட்ரெய்ன். 325 00:14:50,432 --> 00:14:51,892 - நீங்கள் கட்டியணைத்துக்கொண்டீர்களா? - ஆம், 326 00:14:52,392 --> 00:14:56,187 ஆனால் அது விநோதமான, ஒரு கையால் கட்டியணைக்கும் நண்பர்களுக்கானது போன்றது. 327 00:14:56,188 --> 00:14:57,355 அது... 328 00:14:57,356 --> 00:14:59,232 - ...இப்படி... - அவை மோசமானவை. 329 00:14:59,233 --> 00:15:00,608 ஆம், நீ அதை வெறுத்திருப்பாய். 330 00:15:00,609 --> 00:15:02,361 - அவைதான் மோசம். - ஆம். 331 00:15:03,237 --> 00:15:07,741 - அடச்சே. இதோ சென்றுவிட்டாள். - ஆம். 332 00:15:08,325 --> 00:15:09,825 நீங்கள் அதை மோசமாகக் கையாண்டீர்கள். 333 00:15:09,826 --> 00:15:11,119 இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம். 334 00:15:21,964 --> 00:15:23,005 - ஹேய். - ஹேய், நண்பா. 335 00:15:23,006 --> 00:15:25,092 யாருக்குத்தான் திடீரென வருவது பிடிக்காது? 336 00:15:26,009 --> 00:15:27,386 - உள்ளே வாருங்கள். - ஆம். சரி. 337 00:15:30,180 --> 00:15:31,180 ப்ளீஸ். 338 00:15:31,181 --> 00:15:32,266 ஹேய். 339 00:15:37,437 --> 00:15:38,438 நீ இங்கே வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. 340 00:15:39,022 --> 00:15:41,233 என் பர்ஸில் குறிப்பெழுதியிருந்தீர்கள். அது எனக்குப் பிடிக்கவில்லை. 341 00:15:42,651 --> 00:15:44,987 புரிந்தது. இனி நடக்காது. 342 00:15:48,115 --> 00:15:50,408 நீங்கள் குடிக்க எதாவது வேண்டுமா? தண்ணீர்? 343 00:15:50,409 --> 00:15:53,745 தண்ணீர் அருமையானது. ஆலிஸ், உனக்கு தண்ணீர் பிடிக்குமா? 344 00:15:54,246 --> 00:15:55,204 உங்களுக்கு என்ன பிரச்சினை? 345 00:15:55,205 --> 00:15:57,123 நான் அசௌகரியமாக இருக்கும்போது இப்படித்தான் இருப்பேன். பழகிக்கொள். 346 00:15:57,124 --> 00:15:58,875 - நான் தண்ணீர் எடுத்து வருகிறேன். - சரி. 347 00:15:58,876 --> 00:15:59,792 நீ உட்காருகிறாயா? 348 00:15:59,793 --> 00:16:01,378 ஆம், இருக்கை. எங்களுக்கு இருக்கைகள் பிடிக்கும். 349 00:16:10,179 --> 00:16:11,846 நீங்கள் எதைப் பற்றித்தான் பேசுவீர்கள்? 350 00:16:11,847 --> 00:16:14,932 ஒன்றுமில்லை. விளையாட்டுத்தான். 351 00:16:14,933 --> 00:16:17,560 - உங்களுக்கு விளையாட்டு பற்றி எதுவும் தெரியாது. - புண்படுத்தும்படியான யூகம்? 352 00:16:17,561 --> 00:16:19,395 சரி. எந்த விளையாட்டைப் பற்றிப் பேசுவீர்கள்? 353 00:16:19,396 --> 00:16:23,400 பிக்கிள்பால். மோனோபோலி. விளையாட்டுகள். 354 00:16:25,110 --> 00:16:26,736 நீங்கள் என்னைப் பற்றிப் பேசாமல் இருப்பது நல்லது. 355 00:16:26,737 --> 00:16:29,071 நான் அப்படிச் செய்ய மாட்டேன். சத்தியம். 356 00:16:29,072 --> 00:16:30,448 எப்படி இருக்கிறாய்? 357 00:16:30,449 --> 00:16:34,118 நீ லைசென்ஸ் பெற்றுவிட்டதாகவும் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து வருவதாகவும் பிரையன் கூறினார். 358 00:16:34,119 --> 00:16:35,704 உன் வாழ்வில் நிறைய நடப்பது போலத் தெரிகிறது. 359 00:16:36,371 --> 00:16:38,498 அவர் என்னைப் பற்றி உங்களிடத்தில் எதுவும் கூறக் கூடாது. 360 00:16:38,999 --> 00:16:41,251 உண்மையில், அவர் பெரும்பாலும் அவரைப் பற்றித்தான் பேசுவார். 361 00:16:41,752 --> 00:16:43,295 அவர் என்னிடம், “இந்த உடை 362 00:16:44,213 --> 00:16:46,048 எனக்கு நன்றாக உள்ளதா?” அல்லது 363 00:16:46,548 --> 00:16:47,840 ”குழந்தை எனக்கு சரியாக இருக்குமா?” என்று கேட்பார். 364 00:16:47,841 --> 00:16:50,092 அவருக்கு எல்லாம் நன்றாக இருக்குமா என்றுதான் பெரும்பாலும் கேட்பார். 365 00:16:50,093 --> 00:16:51,260 அது உண்மைதான். 366 00:16:51,261 --> 00:16:53,638 அதற்கு எப்போதும் ஆம் என்பதுதான் பதில் என்று தெரிந்துகொண்டேன். 367 00:16:53,639 --> 00:16:55,807 எதிலும் நன்றாக இருக்கும் சிலரில் நான் ஒருவன். 368 00:17:00,646 --> 00:17:05,441 இது நீதிமன்றம் உத்தரவிட்ட மூன்று கோப மேலாண்மை அமர்வுகளாக இருக்க வேண்டியது. 369 00:17:05,442 --> 00:17:07,819 ஆனால் நீங்கள் உள்ளே வந்து 370 00:17:08,945 --> 00:17:10,446 என் மகனின் மனதைக் குழப்பிவிட்டீர்கள். 371 00:17:12,657 --> 00:17:16,993 இப்போது அவன் எல்லாம் என் தவறு என்பது போல நடக்கிறான், ஏனெனில் நீங்கள் அதைத்தான் செய்வீர்கள். 372 00:17:16,994 --> 00:17:20,582 உங்களுக்கு தெரபி பிடிக்காது என்று தெரிகிறது. 373 00:17:21,250 --> 00:17:23,376 தெரபி என்பது ஒரே இரவில் வெற்றியடையாது, 374 00:17:23,377 --> 00:17:27,963 ஆனால் இறுதியில், உங்களுக்கு தொந்தரவு கொடுக்கும் உணர்வுகளையும் 375 00:17:27,964 --> 00:17:30,633 எண்ணங்களையும் நடத்தைகளையும் கண்டறிந்து மாற்ற உதவும். நீங்கள் வாய்ப்பு கொடுத்தால்... 376 00:17:30,634 --> 00:17:31,676 நிஜமாகவா? 377 00:17:31,677 --> 00:17:35,346 தெரபி பற்றிய அவரது எண்ணத்தை மாற்ற இது சரியான நேரம் என நினைக்கிறாயா? 378 00:17:35,347 --> 00:17:38,058 நீங்கள் என் அணி என்பதை உங்களுக்கு நினைவூட்ட வேண்டியதில்லை, பால். 379 00:17:39,017 --> 00:17:41,644 டிம், எங்களை தெரபிஸ்ட்டாக நினைக்காதீர்கள். 380 00:17:41,645 --> 00:17:44,939 எங்களை இரண்டு அப்பாக்களாக நினைத்துக்கொள்ளுங்கள், 381 00:17:44,940 --> 00:17:48,527 ஒருவருக்கு துடுப்பு போடுவது பிடிக்கும். 382 00:17:51,113 --> 00:17:56,076 நானும் உங்களைப் போல, என் மகளிடமிருந்து பிரிந்திருந்தேன். 383 00:17:56,660 --> 00:17:58,120 அவளது அம்மாவுக்கு நான் துரோகம் செய்தேன். 384 00:17:59,162 --> 00:18:02,999 அவள் என் மகளுடன் பிரிந்துவிட்ட போது, நான் மிகவும் அவமானமாக உணர்ந்ததால் 385 00:18:03,000 --> 00:18:05,209 போதுமானளவு போராடவில்லை. 386 00:18:05,210 --> 00:18:09,589 அவளது முதல் பாடல் ஒப்புவித்தலையும் முதல் மாதவிடாயையும் தவறவிட்டேன். 387 00:18:09,590 --> 00:18:11,675 - கடவுளே, பால். - ஆம். என்ன இது? 388 00:18:12,426 --> 00:18:15,262 என் மனைவி இறந்தபோது, என்னால் என் மகளைப் பார்க்கக் கூட முடியவில்லை. 389 00:18:16,972 --> 00:18:20,142 எனவே நான் போதையின் மூலம் அவளிடமிருந்து ஒளிந்துகொண்டேன். 390 00:18:21,810 --> 00:18:24,938 அவளுக்கு மிகவும் நான் தேவைப்பட்டபோது நான் அதை நாசம் செய்துவிட்டேன். 391 00:18:25,606 --> 00:18:27,231 அவள் இன்னும் உங்களுடன் பேசுகிறாளா? 392 00:18:27,232 --> 00:18:29,776 அது அதிசயம்தான், ஆனால் ஆம். 393 00:18:31,278 --> 00:18:33,488 தினமும் அவளிடம் என்னை நிரூபிக்க முயல்கிறேன். 394 00:18:35,365 --> 00:18:38,117 நீங்கள் இருவருமே மோசமான பெற்றோர்கள். 395 00:18:38,118 --> 00:18:39,286 இவன் அப்படித்தான். 396 00:18:40,495 --> 00:18:42,080 இன்று என்னை அதிகமாக காலை வாருகிறீர்கள். 397 00:18:42,623 --> 00:18:43,832 போலீஸ் என்னிடம் என்ன கூறினார்கள் தெரியுமா? 398 00:18:45,501 --> 00:18:47,377 ஷான் திருப்பி சண்டையிடவேயில்லை. 399 00:18:49,588 --> 00:18:52,841 அவன் அவர்களை அடிக்க விட்டுள்ளான். 400 00:18:56,011 --> 00:18:57,303 ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? 401 00:18:57,304 --> 00:18:58,764 அவன் தன்னையே காயப்படுத்திக்கொள்ள விரும்பியுள்ளான். 402 00:19:00,432 --> 00:19:03,477 அவன் உங்கள் மீது எவ்வளவு கோபமாக உள்ளான் என்ற குற்ற உணர்ச்சியைக் கொண்டுள்ளான். 403 00:19:04,186 --> 00:19:06,563 இந்த உலகிலேயே அதிகமாக நேசிக்கும் நபர் மீது. 404 00:19:11,026 --> 00:19:12,861 அவன் சிறுவனாக இருக்கும்போது அவனை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். 405 00:19:14,238 --> 00:19:17,241 கன்னத்தில் சிறிய குழியுடன், எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பான். 406 00:19:18,158 --> 00:19:20,452 ஆனால் ராணுவத்தில் இருந்து திரும்பி வந்த பிறகு... 407 00:19:22,538 --> 00:19:24,705 அந்நியருடன் வசிப்பது போல இருந்தது. 408 00:19:24,706 --> 00:19:28,168 அவன் மிகவும் கோபமாக இருந்தான். 409 00:19:32,589 --> 00:19:34,091 அவனுக்கு எப்படி உதவுவதென எனக்குத் தெரிந்திருக்கவில்லை. 410 00:19:36,009 --> 00:19:37,343 இன்னும் எனக்குத் தெரியவில்லை. 411 00:19:37,344 --> 00:19:38,762 எங்களுடன் வந்து, அவனிடம் பேசுங்கள். 412 00:19:39,596 --> 00:19:40,805 - இல்லை. - கேளுங்கள், டிம்... 413 00:19:40,806 --> 00:19:42,850 சரி, உங்கள் கருத்தைக் கூறிவிட்டீர்கள். 414 00:19:44,226 --> 00:19:45,811 இந்த உரையாடலுக்கு நன்றி. 415 00:19:47,354 --> 00:19:50,065 முன்பு இருந்ததைவிட இப்போது நான் மிகவும் மோசமாக உணர்கிறேன். 416 00:19:51,149 --> 00:19:52,233 அதுதான் தெரபியா? 417 00:19:52,234 --> 00:19:54,236 ஆம், கிட்டத்தட்ட. 418 00:19:55,445 --> 00:19:59,449 நீங்கள் அவனிடம் பேச வேண்டிய அவசியமில்லை. ஆனால் பேச வேண்டும். 419 00:20:01,118 --> 00:20:03,203 வா, ஜிம்மி. போகலாம். 420 00:20:07,833 --> 00:20:10,043 என் தண்ணீரைக் குடித்துவிட்டேன். இப்போது என்ன செய்வது? 421 00:20:11,837 --> 00:20:13,045 நீ விரும்பினால் போகலாம். 422 00:20:13,046 --> 00:20:14,506 நான் என்ன விரும்புகிறேன் எனத் தெரியவில்லை. 423 00:20:16,049 --> 00:20:18,384 நான் ஒரு முடிவை உணர்கிறேன். 424 00:20:18,385 --> 00:20:20,636 யாராவது முடிவை உணர்கிறீர்களா? முடிவு? 425 00:20:20,637 --> 00:20:22,890 - நிஜமாகவா? - அசௌகரியம். உன்னை எச்சரித்தேன். 426 00:20:25,517 --> 00:20:27,394 நீ எனக்கு ஒரு கடிதம் எழுதியதாக பிரையன் கூறினார். 427 00:20:30,898 --> 00:20:31,940 அதில் என்ன இருந்தது? 428 00:20:33,192 --> 00:20:37,279 அது அப்படியே எனக்கு நினைவில்லை, ஆனால் அது... 429 00:20:39,156 --> 00:20:40,782 ”ஹேய், முட்டாளே. 430 00:20:42,159 --> 00:20:46,037 நீ என் அம்மாவைக் கொன்று என் வாழ்க்கையை நாசம் செய்தாய், என் அப்பாவை நாசமாக்கினாய், 431 00:20:46,038 --> 00:20:49,708 அது எல்லாம் நீ சுயநலமான குடிகாரனாக இருந்ததால்தான். 432 00:20:50,626 --> 00:20:53,920 பிறர் என்னை இப்போது வித்தியாசமாக நடத்துகின்றனர். உன்னால் என் நண்பர்களை இழந்துள்ளேன். 433 00:20:53,921 --> 00:20:55,379 நான் எழுந்திருக்கும்போது, 434 00:20:55,380 --> 00:20:58,382 இது அனைத்தையும் பற்றியும் நான் பேச விரும்பும் ஒரு நபர் 435 00:20:58,383 --> 00:21:03,889 இருக்க மாட்டார், இருக்கவும் போவதில்லை, அது எல்லாம் உன் தவறுதான்.” 436 00:21:13,398 --> 00:21:14,483 அது ஒரு நல்ல கடிதம். 437 00:21:19,613 --> 00:21:21,031 உன் அம்மா பற்றி எதுவும் கூறுகிறாயா? 438 00:21:21,698 --> 00:21:22,574 ஏன்? 439 00:21:23,575 --> 00:21:24,826 ஏனெனில் எனக்கு அவரைப் பற்றித் தெரியாது. 440 00:21:26,620 --> 00:21:30,624 எனக்குத் தெரிந்ததெல்லாம்... முடிவுதான். 441 00:21:32,960 --> 00:21:36,964 உனக்கு அவளுடைய கடவாய்ப் பல்லை எடுத்தபோது நினைவிருக்கிறதா... 442 00:21:37,881 --> 00:21:39,675 அவள் மயக்க மருந்தின் வீரியம் குறையும்போது, 443 00:21:40,217 --> 00:21:42,969 அவளது பின்பகுதி எவ்வளவு மென்மையாக இருக்கும் என்று பெருமையடித்துக்கொண்டிருந்தாள். 444 00:21:42,970 --> 00:21:44,136 - பிரையன்! - என்ன? 445 00:21:44,137 --> 00:21:46,305 அவள் நர்ஸிடம் தன் பின்பகுதியைத் தொட்டுப் பார்க்கும்படி கூறினாள். 446 00:21:46,306 --> 00:21:48,182 அந்தக் கதையை இப்போது கூற மாட்டேன். 447 00:21:48,183 --> 00:21:49,517 சரிதான். மன்னித்துவிடு. 448 00:21:49,518 --> 00:21:50,894 நீ எந்தக் கதையைக் கூறுவாய்? 449 00:22:01,196 --> 00:22:02,196 ஹேய். 450 00:22:02,197 --> 00:22:06,368 ஹாய். நீ என்ன செய்கிறாய் என்று பார்க்க கால் செய்தேன். நீ நலமா? 451 00:22:06,994 --> 00:22:09,036 உன் குளியல் தொட்டியில் உட்கார்ந்துகொண்டு 452 00:22:09,037 --> 00:22:11,247 சுற்றியும் நீ எடுத்த நாய்களின் படங்களை வைத்திருக்கிறாயா? 453 00:22:11,248 --> 00:22:13,457 இல்லை, நான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறேன். 454 00:22:13,458 --> 00:22:17,128 இந்த ஜிம்மில் அதிகமாக எதிரொலிக்கிறது. தண்ணீர் சத்தமும் கேட்கிறது. 455 00:22:17,129 --> 00:22:19,715 நான் நலம்தான். என் பிரச்சினைகள் நிஜமானவை இல்லை. 456 00:22:20,382 --> 00:22:23,801 நான் குறை கூற என்ன உள்ளது? எனக்கு பிடித்த ஐலாஷ் பெண் ஊரில் இல்லாததால், 457 00:22:23,802 --> 00:22:25,803 எனக்கு இரண்டாவதாக பிடித்த பெண்ணிடம் செல்ல வேண்டும் என்றா? 458 00:22:25,804 --> 00:22:28,639 ஹேய், லிஸ், உனக்கு அப்படிச் செய்துகொள்ளாதே, சரியா? 459 00:22:28,640 --> 00:22:31,642 இது நிஜமானது, நீ கவனமாக இல்லையெனில், இது உன்னை ஆட்கொண்டுவிடும். 460 00:22:31,643 --> 00:22:35,939 நான் சொல்வதைக் கேள். நீ அந்தத் தொட்டியிலிருந்து வெளியேறி, உன் கற்களுடன் விளையாடு. 461 00:22:36,440 --> 00:22:39,108 கமான். அந்த அடைப்பை எடு. 462 00:22:39,109 --> 00:22:41,736 இல்லை, இங்கே பாதுகாப்பாகவும் கதகதப்பாகவும் உள்ளது. 463 00:22:41,737 --> 00:22:42,654 உனக்கு ஒரு டீல் சொல்கிறேன். 464 00:22:43,238 --> 00:22:46,157 அந்தத் தொட்டியிலிருந்து வெளியேறி, உன்னால் முடிந்ததைச் செய்ய முயன்றால், 465 00:22:46,158 --> 00:22:48,451 நான் என் அம்மாவின் அறுவை சிகிச்சைக்குச் செல்கிறேன். 466 00:22:48,452 --> 00:22:52,079 உன் சகோதரியின் வாழ்க்கையை வாழவிடாமல் தடுத்தாய் என அவளிடம் கூறுவாயா? 467 00:22:52,080 --> 00:22:54,916 என்ன? எனக்கு அழுத்தம் கொடுக்காதே. அந்த அடைப்பை எடு. 468 00:22:54,917 --> 00:22:56,210 அதை நான் கேட்க வேண்டும். 469 00:22:57,294 --> 00:22:58,378 அருமை. 470 00:22:59,087 --> 00:23:00,923 - நன்றி. - சரி, பை. 471 00:23:04,092 --> 00:23:05,510 ஹாய். 472 00:23:05,511 --> 00:23:07,220 என் இரண்டு மகள்களும் இங்கே உள்ளனரா? 473 00:23:07,221 --> 00:23:08,805 இல்லை, அம்மா, நான் மட்டும்தான். 474 00:23:09,723 --> 00:23:10,723 நாசமாய்ப் போ. 475 00:23:10,724 --> 00:23:11,725 நான் இங்குதான் உள்ளேன், அம்மா. 476 00:23:13,310 --> 00:23:14,602 நன்றாகச் செய்தேனா? 477 00:23:14,603 --> 00:23:16,229 - ஆம். - ஆம், அருமையாகச் செய்தீர்கள். 478 00:23:16,230 --> 00:23:19,398 மேலும் ஸ்பேஸ் மவுன்டைனில் எனக்குப் பிடித்த தொப்பி பறந்துவிட்டது. 479 00:23:19,399 --> 00:23:20,734 நான் மிகவும் கவலையடைந்தேன். 480 00:23:21,443 --> 00:23:25,321 என் அம்மா என்னை நேராக கடைக்குக் கூட்டிச் சென்று, 481 00:23:25,322 --> 00:23:28,992 மூன்று கூஃபி தொப்பிகள் வாங்கினார். 482 00:23:30,118 --> 00:23:32,495 நான் மிகவும் கோபப்பட்டேன், ஏனெனில் அது என் பழைய தொப்பி போன்றது இல்லை. 483 00:23:32,496 --> 00:23:34,456 என் பழைய தொப்பி என்னை அழகாகக் காட்டும். 484 00:23:35,541 --> 00:23:41,379 ஆனால் அது தொப்பி பற்றியது இல்லை என்றார். 485 00:23:41,380 --> 00:23:45,259 அது எப்படி என்னை அணிய வைத்தது என்பதைப் பற்றியது. 486 00:23:49,179 --> 00:23:52,683 அது பொய்தான், ஏனெனில் நான் அந்த கூஃபி தொப்பியில் மொக்கையாக இருந்தேன். 487 00:23:56,478 --> 00:23:57,980 ஆனால் அவர் அழகாக இருந்தார். 488 00:24:00,357 --> 00:24:02,025 அவர் எதிலும் அழகாக இருப்பார். 489 00:24:04,653 --> 00:24:05,863 ஆம், அது ஒரு அழகான நாள். 490 00:24:06,738 --> 00:24:09,616 அவள் கனிவானவராகவும் வேடிக்கையாகவும் தெரிகிறார். 491 00:24:10,868 --> 00:24:12,827 அது இரண்டும் இருப்பது அரிதானது. 492 00:24:12,828 --> 00:24:14,246 ஆம். 493 00:24:14,746 --> 00:24:16,373 கடவுளே, நான் அவளை மிஸ் செய்கிறேன். 494 00:24:18,625 --> 00:24:19,710 யார் அந்தப் பெண்? 495 00:24:20,878 --> 00:24:23,422 அது சாரா. அவள்... 496 00:24:25,174 --> 00:24:26,383 நான் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண். 497 00:24:26,967 --> 00:24:27,968 அவர் அழகாக இருக்கிறார். 498 00:24:29,178 --> 00:24:30,179 நாங்கள்... 499 00:24:34,558 --> 00:24:38,020 அவர் ஏன் மூன்று தொப்பிகளை வாங்கினார்? உன் அம்மா. ஏன் மூன்று தொப்பி வாங்கினார்? 500 00:24:38,937 --> 00:24:42,565 நாங்கள் அந்த சவாரிக்குச் செல்லும்போது ஒரு சிறுவன் மீது அம்மா மோதிவிட்டார், 501 00:24:42,566 --> 00:24:46,737 அவன் தனது ஐஸ் கிரீமை கீழே போட்டுவிட்டு, அழுதுகொண்டிருந்தான். 502 00:24:48,488 --> 00:24:51,825 அவனது அம்மா பரவாயில்லை என்றார், ஆனால் என் அம்மா மோசமாக உணர்ந்தார். 503 00:24:52,659 --> 00:24:56,038 எனவே அவனை மீண்டும் பார்த்தால் கொடுப்பதற்காக இன்னொரு தொப்பி வாங்கினார். 504 00:24:57,039 --> 00:24:58,123 அவனை எல்லா இடங்களிலும் தேடினோம். 505 00:24:58,707 --> 00:24:59,625 அவனைக் கண்டுபிடித்தீர்களா? 506 00:25:02,252 --> 00:25:04,671 ஆம். அது அற்புதமாக இருந்தது. 507 00:25:06,715 --> 00:25:08,217 நான் அதை மறந்துவிட்டேன். 508 00:25:09,635 --> 00:25:10,636 நன்றி. 509 00:25:13,180 --> 00:25:15,516 நான் உன்னிடம் என்ன கூற வேண்டும் என நிறைய யோசித்தேன். 510 00:25:17,643 --> 00:25:22,523 அனைத்தையும் எப்படி விளக்குவது என்று. ஏன் அன்று வண்டி ஓட்டினேன் என்று. 511 00:25:24,608 --> 00:25:26,151 அதனால் எவ்வளவு வருந்துகிறேன் என்று. 512 00:25:29,863 --> 00:25:31,365 ஆனால் அது எதுவும் முக்கியமில்லை, 513 00:25:32,366 --> 00:25:36,495 ஏனெனில் அது நடந்துவிட்டது, அது என் தவறுதான். 514 00:25:39,331 --> 00:25:41,458 அதை மாற்ற என்னால் எதுவும் செய்ய முடியாது. 515 00:25:45,337 --> 00:25:46,379 என்னால் கூற முடிந்ததெல்லாம் 516 00:25:46,380 --> 00:25:51,343 நான் அவளைப் பற்றி நினைக்காமல் ஒரு நொடி கூட கடப்பதில்லை என்பதுதான். 517 00:25:53,178 --> 00:25:55,973 அல்லது உன்னை. அல்லது உன் அப்பாவை. 518 00:25:57,683 --> 00:26:02,229 உங்களைப் பற்றி... எப்போதும் நினைக்கிறேன். 519 00:26:05,607 --> 00:26:07,943 நான் மிகவும் வருந்துகிறேன். நான்... 520 00:26:08,819 --> 00:26:09,944 என்னால் அதை மாற்ற முடிய வேண்டும் என விரும்புகிறேன். 521 00:26:09,945 --> 00:26:12,446 - கடந்தகாலத்திற்குச் சென்று அதை மாற்ற... - உங்களை மன்னித்துவிட்டேன். 522 00:26:12,447 --> 00:26:13,532 என்ன? 523 00:26:18,453 --> 00:26:19,663 உங்களை மன்னித்துவிட்டேன். 524 00:26:22,124 --> 00:26:23,542 என் அம்மா அதைத்தான் செய்திருப்பார். 525 00:26:29,089 --> 00:26:30,090 நன்றி. 526 00:26:33,135 --> 00:26:34,136 நான்... 527 00:26:38,307 --> 00:26:39,308 நன்றி. 528 00:26:55,115 --> 00:26:56,115 நான் கிளம்புகிறேன். 529 00:26:56,116 --> 00:26:57,033 எங்கே போகிறீர்கள்? 530 00:26:57,034 --> 00:26:59,827 ஊரில் புதிதாக ஒரு கடை திறந்துள்ளனர். நான் அங்கே பெல்ட்டுகளைப் பார்க்கப் போகிறேன். 531 00:26:59,828 --> 00:27:03,497 அது பெல்ட் கடை இல்லை, ஆனால் கண்டிப்பாக அங்கே இருக்கும். 532 00:27:03,498 --> 00:27:04,457 அது இருக்க வாழ்த்துகள். 533 00:27:04,458 --> 00:27:07,419 ஆம். நீதான் சிறந்தவள். 534 00:27:08,629 --> 00:27:09,671 ஹேய், நான்... 535 00:27:12,174 --> 00:27:13,300 விடுங்கள். ஒன்றுமில்லை. 536 00:27:14,968 --> 00:27:18,430 என்ன? நீ என்னிடம் எதையும் கூறலாம். வழக்கமாகக் கூறுவாயே. 537 00:27:19,556 --> 00:27:23,477 நான்... உணர்வது... எனக்குத் தெரியவில்லை. 538 00:27:24,186 --> 00:27:28,482 நீங்கள் நீருக்குள் இருப்பது போல, வேறொருவர் போல உணர்வீர்களா? 539 00:27:29,525 --> 00:27:30,943 மிகவும் முட்டாள் போல. 540 00:27:32,110 --> 00:27:36,156 அந்த நாய்களின் பட விஷயம் என்னை மிகவும் பாதித்துள்ளது, புரிகிறதா? 541 00:27:36,865 --> 00:27:38,075 அந்த டிரக்கையும் நான் மிஸ் செய்கிறேன். 542 00:27:39,243 --> 00:27:41,452 இந்த வீட்டை நான் நேசிக்கிறேன். அது உங்களுக்குத் தெரியும், 543 00:27:41,453 --> 00:27:45,122 ஆனால் நம் மகன்கள் இல்லாமல் இது வெறுமையாக இருக்கிறது. 544 00:27:45,123 --> 00:27:46,458 இருந்தாலும் இரைச்சல் இல்லாமல் இருக்கிறதுதானே? 545 00:27:47,876 --> 00:27:49,418 ஆம். நல்ல மணமாகவும் உள்ளது. 546 00:27:49,419 --> 00:27:53,924 ஆம். சரி. உனக்கு இன்னொரு டிரக் வாங்கலாமா? 547 00:27:55,342 --> 00:27:56,259 நான் கிரில்டு சீஸுக்கு வாக்களிக்கிறேன். 548 00:27:56,260 --> 00:28:00,639 - அதை எனக்குச் செய்யத் தெரியும். - ஆம். 549 00:28:01,139 --> 00:28:05,518 ஒன்று சொல்லவா? நான் அருமையாக உள்ளேன். போய் பெல்ட்டுகளை ரசியுங்கள். 550 00:28:05,519 --> 00:28:07,688 அருமை. பிறகு பார்க்கலாம். 551 00:28:08,397 --> 00:28:09,523 உன்னை நேசிக்கிறேன், அன்பே. 552 00:28:10,190 --> 00:28:11,190 உங்களை நேசிக்கிறேன். 553 00:28:11,191 --> 00:28:13,735 அடக் கடவுளே. இப்போது எனக்குள் நிறைய பதட்டம் உள்ளது. 554 00:28:14,820 --> 00:28:17,071 - நாம் டேவ் & பஸ்டர்ஸுக்குப் போகலாமா? - கண்டிப்பாக. 555 00:28:17,072 --> 00:28:17,989 இருங்கள். பிரையன். 556 00:28:17,990 --> 00:28:20,283 முன்பு உங்களை அதிகமாகத் திட்டினேன் எனத் தெரியும், 557 00:28:20,284 --> 00:28:22,911 ஆனால் நீங்கள் அவரைத் தொடர்புகொண்டதற்கு மிகவும் நன்றி. 558 00:28:23,829 --> 00:28:26,164 ஆம், இது கண்டிப்பாக எனக்குப் புதிய விஷயம்தான். 559 00:28:28,625 --> 00:28:29,626 இருந்தாலும். 560 00:28:31,044 --> 00:28:34,882 சிலநேரம் ஒருவருக்கு உதவி தேவையா என்பதைப் பார்ப்பது எளிதுதான். 561 00:28:37,092 --> 00:28:38,594 அவர்கள் முகத்திலேயே அது எழுதியிருக்கும். 562 00:28:43,182 --> 00:28:46,392 அவர் ஏன் தங்க வேண்டும் என்று எனக்குப் புரிய வேண்டும். இது கண்புரை அறுவை சிகிச்சைதான். 563 00:28:46,393 --> 00:28:48,686 நான் அந்த டாக்டருக்கு லஞ்சம் கொடுத்து, அவரை தங்க வைத்துள்ளேன், 564 00:28:48,687 --> 00:28:50,688 ஏனெனில் நீ இந்த இரவு ஓய்வெடுக்கலாம் என்று. 565 00:28:50,689 --> 00:28:51,814 நீ என் ஹீரோ. 566 00:28:51,815 --> 00:28:53,901 மேலும், என் புதிய வீட்டை நீ பார்க்க வேண்டும். 567 00:28:55,986 --> 00:28:56,987 ஆம். 568 00:28:57,738 --> 00:28:59,155 இது மிகவும் அற்புதமாக உள்ளது. 569 00:28:59,156 --> 00:29:00,531 ஆம். 570 00:29:00,532 --> 00:29:02,366 ஆடம்பரமானது. அதிக விலையுடையது. 571 00:29:02,367 --> 00:29:03,951 பெண்ணே, உன்னிடம் மெழுகுவர்த்திக்கான இடங்கள் இல்லை. 572 00:29:03,952 --> 00:29:06,078 ஆம், பெண்ணே. என்னிடம் நிறைய உள்ளன. 573 00:29:06,079 --> 00:29:08,165 ம்ம் ஹ்ம்ம். வாவ். 574 00:29:08,749 --> 00:29:10,918 இவற்றைக் காட்டி என்னை வெறுப்பேற்றத்தான் என்னைக் கூட்டி வந்தாயா? 575 00:29:11,418 --> 00:29:13,212 - ஆம். கொஞ்சம். - ம்ம் ஹ்ம்ம். 576 00:29:14,004 --> 00:29:15,380 அது மட்டும் காரணம் இல்லை. 577 00:29:16,465 --> 00:29:18,509 கோர்ட்னி, நான் உன்னை விடுவிக்கிறேன். 578 00:29:19,885 --> 00:29:21,260 அதற்கு என்ன அர்த்தம்? 579 00:29:21,261 --> 00:29:25,641 நான் கூற வருவது... 580 00:29:27,768 --> 00:29:29,436 நீ அம்மாவுக்காக எவ்வளவு செய்கிறாய் எனத் தெரியும். 581 00:29:30,395 --> 00:29:33,148 நீ உன் வாழ்வைத் திரும்பப் பெற எவ்வளவு கடினமாக உழைக்கிறாய் என்றும் தெரியும். 582 00:29:34,149 --> 00:29:35,901 அதற்காக உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன். 583 00:29:36,902 --> 00:29:37,735 நன்றி. 584 00:29:37,736 --> 00:29:43,241 நீ சென்றுவிட்டால் அம்மா என்னை அழைப்பாரோ என்று பயந்திருந்தேன், 585 00:29:43,242 --> 00:29:44,408 உண்மையில், 586 00:29:44,409 --> 00:29:47,411 அதற்கு “சரி” அல்லது “முடியாது“ என்று எப்படிக் கூறுவது எனத் தெரியவில்லை. 587 00:29:47,412 --> 00:29:50,206 ஆனால் அது உன் பிரச்சினை இல்லை. என்னுடையது. 588 00:29:50,207 --> 00:29:53,293 சரி, உன் தண்டனை முடிந்தது. அதற்கு மேலும் செய்துவிட்டாய். 589 00:29:53,961 --> 00:29:54,961 ஆம். 590 00:29:54,962 --> 00:29:58,714 அவர் விஷயத்தில் என்ன செய்வது என்று கண்டுபிடிக்க 591 00:29:58,715 --> 00:30:00,384 நீ எனக்கு கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும் எனக் கேட்கிறேன். 592 00:30:02,094 --> 00:30:05,013 அதன்பிறகு, அங்கிருந்து வெளியேறிவிடு. புரிகிறதா? 593 00:30:06,890 --> 00:30:07,891 அதற்காகக் குடிப்பேன். 594 00:30:09,685 --> 00:30:10,685 உனக்கு எவ்வளவு காலம் தேவை? 595 00:30:10,686 --> 00:30:11,895 தெரியவில்லை. 20 ஆண்டுகள். 596 00:30:12,479 --> 00:30:13,855 - இரண்டு நாட்கள். - எட்டு ஆண்டுகள். 597 00:30:13,856 --> 00:30:15,524 - இரண்டு வாரங்கள். - மூன்று மாதங்கள். 598 00:30:16,817 --> 00:30:18,235 எனக்கு மூன்று மாதங்கள் கொடு. 599 00:30:19,111 --> 00:30:20,279 சரி. 600 00:30:22,322 --> 00:30:24,032 எப்படி இருக்கிறாய், தம்பி? 601 00:30:24,950 --> 00:30:28,619 இன்னும் வலிக்கிறது. ஆனால் பரவாயில்லை. 602 00:30:28,620 --> 00:30:29,620 ஆம். 603 00:30:29,621 --> 00:30:31,957 நீங்கள் என் அப்பாவிடம் பேசியதாக அம்மா கூறினார். 604 00:30:33,041 --> 00:30:34,041 அவர் வந்திருக்கிறாரா? 605 00:30:34,042 --> 00:30:37,378 - ஆ, நண்பா. அப்பாக்கள் சிக்கலானவர்கள். - ஆமாம். 606 00:30:37,379 --> 00:30:39,673 நாம் விரும்பும்போது அவர்கள் ஆதரவளிக்க மாட்டார்கள். 607 00:30:40,632 --> 00:30:44,553 ஆனால் எப்படியும் வந்துவிடுவார்கள். என்னைப் பார். எனக்கு ஓராண்டு ஆனது. 608 00:30:45,637 --> 00:30:46,888 ஹேய். 609 00:30:46,889 --> 00:30:48,181 அது மிகவும் சீக்கிரம். 610 00:30:48,182 --> 00:30:49,265 ஹேய், அப்பா. 611 00:30:49,266 --> 00:30:52,143 இவர்களைக் கொஞ்சம் தனியாக விடுவோம். 612 00:30:52,144 --> 00:30:53,228 நன்றி. 613 00:30:57,232 --> 00:31:01,736 உணர்வுகள் பற்றி நான் சிறப்பாக பேச மாட்டேன் என நம் இருவருக்கும் தெரியும். 614 00:31:01,737 --> 00:31:02,737 பரவாயில்லை, அப்பா. 615 00:31:02,738 --> 00:31:05,282 - நீங்கள் எதுவும் கூற வேண்டாம். - இல்லை. என்னைப் பேச விடு. 616 00:31:06,158 --> 00:31:08,827 நான் உன்னைக் கைவிட்டதாக நீ கூறியபோது... 617 00:31:11,413 --> 00:31:13,832 நான் மிகவும் கோபப்பட்ட காரணம்... 618 00:31:15,626 --> 00:31:18,837 என்னவெனில்... நீ கூறியது சரிதான். 619 00:31:22,341 --> 00:31:25,469 ஓ, ஷான். மகனே, என்னை மன்னித்துவிடு. 620 00:31:25,969 --> 00:31:30,098 பரவாயில்லை, அப்பா. நமக்குள் பிரச்சினையில்லை. 621 00:31:34,603 --> 00:31:35,604 ஆம். 622 00:31:38,774 --> 00:31:41,485 இங்கிருந்து எழுந்து வந்து நீ என்னுடன் மீன்பிடிக்க வர வேண்டும். 623 00:31:44,863 --> 00:31:47,156 இப்போதைக்கு உன்னால் பிரேக் டான்ஸ் ஆட முடியாது. 624 00:31:47,157 --> 00:31:48,115 சிரிக்க வைக்காதீர்கள். 625 00:31:48,116 --> 00:31:49,742 ஆம், நீ அந்தக் கட்டத்தில் இருந்தது நினைவுள்ளதா? 626 00:31:49,743 --> 00:31:51,161 அட, இது மிகவும் உணர்வுப்பூர்வமாக உள்ளது. 627 00:31:51,745 --> 00:31:53,080 அவர்களைப் பார்க்காதே. 628 00:31:53,580 --> 00:31:55,456 பால், இது மிகவும் உணர்வுப்பூர்வமான தருணம். 629 00:31:55,457 --> 00:31:59,086 நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். அவர் தன் மகனுக்கு செய்வதை உங்களுக்குச் செய்வேன். 630 00:32:02,172 --> 00:32:03,048 அதைச் செய்யாதே. 631 00:32:08,178 --> 00:32:09,679 நிறுத்து. 632 00:32:09,680 --> 00:32:12,640 பால். வேண்டாமெனில், உங்கள் கையை எடுத்துக்கொள்ளலாம். 633 00:32:12,641 --> 00:32:16,895 நான் எடுக்கப் போவதில்லை. நீ வரம்புகள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். 634 00:32:25,362 --> 00:32:28,240 இவர்தான் கேட்டார், நான் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை. நான் இவரிடம் வேலை செய்கிறேன். 635 00:32:38,542 --> 00:32:40,251 ஆஹா, இவை அற்புதமாக உள்ளன. 636 00:32:40,252 --> 00:32:41,335 நிறுத்து. 637 00:32:41,336 --> 00:32:45,673 என் நாய் மிகவும் அழகானவன், ஆனால் நான் படம்பிடிக்கும்போதெல்லாம், பின்புறத்தை நக்குவான். 638 00:32:45,674 --> 00:32:47,425 அதனால் முடிகிறது. 639 00:32:47,426 --> 00:32:49,678 இருந்தாலும், அது புகைப்படம் எடுப்பவரின் தவறுதான். 640 00:32:50,345 --> 00:32:52,138 - நான்தான்... - ஆம். 641 00:32:52,139 --> 00:32:53,139 எனில் எனக்கு உதவி செய். 642 00:32:53,140 --> 00:32:57,102 அதாவது, இங்குதான் இருக்கிறான். உன் கேமரா உள்ளது. அந்தப் பூங்காவிற்குச் செல்வோம். 643 00:32:58,604 --> 00:32:59,771 என்ன? இப்போதேவா? 644 00:33:01,023 --> 00:33:02,733 ஆம். இப்போதே. 645 00:33:06,904 --> 00:33:09,489 சரி. ஏன் கூடாது? 646 00:33:10,574 --> 00:33:12,116 அருமை. போகலாம். 647 00:33:12,117 --> 00:33:13,159 வா, நண்பா. 648 00:33:13,160 --> 00:33:14,411 இன்று இவனது அதிர்ஷ்டமான நாள். 649 00:33:15,370 --> 00:33:17,706 - பார்த்து... ஜாக்கிரதை. - இவன் அழகாக இருக்கிறான். மன்னிக்கவும். 650 00:34:13,929 --> 00:34:15,931 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்